search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆறாட்டு விழா"

    • திரளான பக்தர்கள் பங்கேற்பு
    • அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடந்தது

    கன்னியாகுமரி,

    ஜூன்.12-

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன்வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. 9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாக னத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடந்தது.

    10-ம் திருவிழாவான இன்று காலை 9 மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி உற்சவ அம்பாளை கோவிலில் இருந்து வாக னத்தில் அலங்கரித்து மேள தாளத்துடன் ஊர்வலமாக கோவிலின் கிழக்கு வாசல் முன்பு அமைந்துள்ள ஆராட்டு மண்டபத்துக்கு எடுத்து வந்தனர்.

    பின்னர் ஆராட்டு மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள் சிறப்பு வழிபாடுகள் தீபாரதனை நடந்தது அதன் பிறகு முக்கடல் சங்கமத்தில் உற்சவ அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது. உற்சவ அம்பாளை கோவில் மேல்சாந்திகள் கடல் தீர்த்த த்தில் ஆராட்டினார்கள்.

    அதைத்தொடர்ந்து ஆடி அமாவாசை, தை அமாவாசை, கார்த்திகை தீபத் திருவிழா, நவராத்திரி விஜயதசமி திருவிழா, வைகாசி விசாகம் ஆகிய 5 முக்கிய விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் இன்று காலை 9.30 மணிக்கு திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் கோவிலுக்குள் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதைத்தொடர்ந்து அந்த வாசல் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசனம் செய்தனர். இந்த ஆராட்டு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது.9- மணிக்கு தெப்பத்திரு விழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு மீண்டும் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி முக்கடல் சங்கமத்தில் ஆறாட்டு விழா நடந்தது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், ஆன்மிக சொற்பொழிவு, சப்பர பவனி, வாகன பவனி போன்றவை நடந்து வந்தன.

    9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    10-ம் திருவிழாவான நேற்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பகவதி அம்மனுக்கு ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், களபம், சந்தனம், குங்குமம், தயிர் போன்ற பொருட்களால் அஷ்டாபிஷேகம் நடந்தது.

    காலை 9 மணிக்கு அம்மன் ஆறாட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. அம்மனை மேளதாளம் முழங்க சன்னதி தெரு, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி வழியாக கிழக்கு வாசல் கடற்கரையில் உள்ள ஆறாட்டு மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன், விட்டல், ராதாகிருஷ்ணன், பத்மநாபன், கீழ் சாந்திகள் ஸ்ரீதர், சீனிவாசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் பூஜைகள் நடத்தினர். உற்சவ அம்பாளையும், ஸ்ரீ விக்ரகத்தையும் முக்கடல் சங்கமத்துக்கு எடுத்து சென்று ஆறாட்டு நடத்தினர்.

    பின்னர் வருடத்தில் 5 முக்கிய தினங்களில் மட்டும் திறக்கப்படும் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக அம்மன் பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில், கோவில் மேலாளர் சிவராமசந்திரன், தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், கோட்டார் இளங்கடை பட்டாரியார் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் தலைவர் சொக்கலிங்கம், நிர்வாகி இளங்கோ உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
    ×